பகிரவும்

அத்தனை அழகும் பெண்பால்
பிறந்தால் மட்டும் கள்ளிப்பால் !

அம்மனாக இருக்கிறோம் கோயிலுக்குள்
மூன்றுநாள் தீட்டு எங்கள் வீட்டுக்குள்!

கோவணக் குளியலில் தெரியாத விரசம்
துப்பட்டா விலகளில் தெரிவதே
ஆண்மைத் திமிரின் அளவுகோல் !

யோனிகள் மட்டுமே
சமத்துவத்தின் இடமாகிறது
ஆறிலிருந்து அறுவது வரையும்!

உடனிருப்பது அண்ணனே ஆயினும்
அவுசாரி பட்டம்தான் எங்களுக்கு!
நாளொரு பெண்ணை நாடினாலும்
‘ஆம்பளைனா அப்படித்தான்’ படோடாபம் உங்களுக்கு!

போப் ஆண்டவர் ஆரம்பித்து
உள்ளூர் பூசாரி வரை
அனைவருமே ஆம்பளை!
பெண்ணா பொறந்ததுக்கு
பொட்டுகட்டித்தான் விட்டாங்க !

“ஆண்கள் என்றால் அரவணைப்பாம்”                                                                            “பேருந்தில் பின் நின்று அணைப்பதைத் தவிர வேரறியேன்” !

பெண் படித்தால் போதும்
வையமே மாறும்!
அய்யோ பாவம்!
மேனேஜர் கேபின் சொல்லும்
கதைகள் உண்டு ஆயிரம் !

“மாதராய்ப்  பிறக்க
மாதவம் செய்தல் வேண்டுமாம்”
முண்டாசு கவிஞரே
மூன்று வயதுக் குழந்தை மீது                                                                                                       பாலியல் வன்புணர்வு  !
இதான் இப்ப நியூஸ்.

சொல்ல மறந்துவிட்டேன்                                                                                                 பெண்மையை போற்றுவோம் !

அத்தனை அழகும் பெண்பால்
பிறந்தால் மட்டும் கள்ளிப்பால் !

மகளிர் தின வாழ்த்துகள்!

Featured Image credit: penniyam

 

Facebook Comments
பகிரவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here